பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அ.ச. ஞானசம்பந்தள்


அதிர்ச்சியைத் தருகின்றதோ அதுபோல இந்த மந்திரங்களை அறிந்து கூறினாலும், அறியாமல் கூறினாலும் அந்த ஒலி அதிர்வுகள் நமக்கு ஆற்றலைத் தரத்தான் செய்கின்றன.

செப்புத் தகட்டிலே சக்தி வாய்ந்த சக்கரங்களாக அமைவதும், கடத்திலே உள்ள நீரை சக்தி வாய்ந்ததாக மாற்றுவதும் ஓயாமல் தன்னை ஜபிக்கின்றவர்களுக்குத் தன் முழுசக்தியைத் தருவதும் ஆக விளங்குவது மந்திரங்களாகும்.

இவை நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும் மறைமொழியாம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இங்கு கூறப்பெற்றுள்ள கருத்துகள் சைவம வைணவம் ஆகிய இரண்டனுக்கு மட்டுமே உரியவை போலும் என்று எவரும் நினைத்துவிட வேண்டா. இக்கட்டுரையில் சான்றாகக் காட்டியன சைவத்திற் குரியன என்பது தவிர இக்கருத்துகள் அனைத்தும் மந்திரங்களைப் போற்றும், எல்லாச் சமயங்கட்கும் உரியன.

கடவுள் கொள்கை இல்லாத பெளத்த சமண சமயங்கட்கும் மந்திரங்கள் உள்ளன. ஆதலால் இக்கட்டுரையில் கூறப்பெறுவன எச்சமயங்கட்கும் பொருந்துவனவே.