பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2 சித்தர்கள்


முதன்முதலாக எனது சிந்தனையைத் தூண்டியவனே ராஜராஜன். அதற்காக நன்றி பாராட்டுகிறேன் அவனுக்கு.

ராஜராஜனுடைய கல்வெட்டுகளைப் படித்து தேவாரத் திருப்பதிகம் பாடிய 48 பேர்களுக்கும் அதில் பேர் கொடுத்துள்ளதைப் படித்தபோதுதான் எனக்கு முதன்முதலாக ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம் சமய அடிப்படையில் பழகியவன் நான். ஆகவே பேரோடு ஒரு பெயரைச் சேர்ப்பதற்கு தீட்சாநாமம் என்று பெயர். அதை நம்மில் பலர் நினைக்காத காரணத்தினால் ராஜராஜன் கல்வெட்டு களைப் படித்து தேவாரம் பாடியவர்களை எல்லாம் ராஜராஜன் நியமித்தான் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். திருநாவுக்கரசன், ஞான சம்பந்தன் என்ற பெயரை சும்மாவிடவில்லை அவன். 'திருநாவுக்கரையனான அகோரசிவன், ஞானசம்பந்த னான 'வாமதேவசிவன்' என்று கல்வெட்டில் அவன் ஏன் போடவேண்டும்? பின்னால் வருகிற நாமங்கள் எல்லாம் தீட்சா நாமம். தேவாரப் பதிகம் பாடுவதற்கு தீட்சா நாமம் எதற்கு? ஆகவே, இங்கே இருக்கிறவர்கள்