பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 அ.ச. ஞானசம்பந்தன்


சிவத்திற்கும், இந்தத் திருமுறை கண்ட புராணத்திற்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது. அந்த திருமுறை கண்ட புராணத்தில்தான் - இந்த - அதுவும் இந்த ராஜராஜன் என்று சொல்வதற்கும் வழி கிடையாது. பண்டாரத்தாரும், வெள்ளைவாரணனாரும், மாறு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். - அந்த திருமுறை கண்ட புராணத்தில்தான் சிதம்பரத்திலே மூடி வைத்திருந்தது, கை வைத்தது எல்லாம் இருக்கிறது. இதைத்தவிர வேறு எங்கேயும் கிடையாது. எனக்கு ஒரு சந்தேகம்.

தேவாரம் பாடிய இவர்களுக்கு இவ்வளவு சிறப்புக் கொடுத்து பட்டயம் எழுதிய ராஜராஜன் தான் தேவாரத்தையே கண்டிருப்பானேயானால் அதைக் கல்வெட்டிலே காட்டியிருக்கமாட்டானா? இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தவன் - பரசூரி இன்னச்சின்ன சமாசாரங்களுக்கெல்லாம் கல்வெட்டிலே இடம் குறிக்கின்றவர்கள். அவன் திருமுறைகளைக் கண்டு பிடித்திருந்தான் என்றால் ஏன் கல்வெட்டிலே சொல்லவில்லை. தன் அகம் பாவம் கூடாது என்றால் அவன் மகன் ராஜேந்திரன் சொல்லியிருக்கலாம் அல்லவா? இரண்டு பேருமே சொல்லவில்லையே என்றவுடன் சந்தேகம் தோன்றியது.

'நெகேஷன் இஸ் நாட் எ கன்பர்மேஷன் - இல்லையென்றதனாலே ஒன்றைச் சாதிக்க முடியாது. ஆகையினாலே இந்த ஆர்க்யுமெண்டை நான் பெரிதுபடுத்தவில்லை. இவர்கள் சொல்லவில்லை. அதனால் எங்கோ, ஏதோ கோளாறு இருக்கிறது. என்ன