பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 17


கடல்கடந்த உலகெல்லாம் காக்கின்ற
பெருமான் காடவர்கோன்

என்று பாடுகிறவர் சுந்தரர். பல்லவர்மேல் எல்லை யில்லாத அன்பு வைத்திருக்கிறார். அப்படியிருக்க தன் காலத்திலிருந்த பல்லவனாகிய ராஜசிம்மன் கட்டிய கைலாசநாதர் கோயிலைத் திரும்பிப் பார்க்காமல் அதற்கு ஒரு நூறு, நூற்றைம்பது அடி தள்ளி உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்கு - பிள்ளையார் கோயில் என்று சொல்வதற்குக் காரணம் - மிகச்சிறிது - 12 x 11 அளவினது திருக்கச்சி அனேகதங்காவதம் என்ற கோவிலுக்குப் போய்ப் பாடியிருக்கிறார் என்றால் வேண்டுமென்றே கைலாசநாதர் கோவிலுக்குள்ளே சுந்தரர் போகவில்லை என்ற முடிவுக்கு வந்தேன் - மன்னித்துக்கொள்ளுங்கள். தப்பாக இருந்தால் விட்டுவிடுங்கள்.

கைலாசநாதர் கோவிலுக்கு ஏன் போக வில்லை. அகம்பாவத்திலே கட்டப்பட்ட கோவில் என்பது ஒன்று. இரண்டு - புதியதாக வந்தவற்றை இவர்கள் வரவேற்பது இல்லை. மூன்றாவதாக தமிழ் மக்களே கூட பழமைக்குக் கொடுத்த மரியாதையை புதுமைக்குக் கொடுக்கவில்லை.

ஆகையினாலே சோழர்கள் இத்தகைய கோயில்களைக் கட்டியும் அவை இன்றைக்கு இருப்பது போலத்தான் அன்றைக்கும் இருந்தன. பாடல் பெற்ற கோயில்களுக்குப் போனார்கள் தமிழர்கள். அதற்குக் காரணம் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இல்லை. ஆன்மிகத்தில் பார்க்கலாம். பாடல்பெற்ற கோவில் என்று ஏன் பெயர் என்றால் விஞ்ஞான முறையிலே சொல்ல வேண்டுமானால் 'மெல் அதிர்வுகள் உள்ள இடங்கள்.