பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 அ.ச. ஞானசம்பந்தன்


சொல்லிய காரணத்தினாலே தமிழுக்கு முக்கியத்துவம் சொடுத்தார்.

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்ல. சில அடிப்படைப் பழக்க வழக்கங்களும் நுழைய ஆரம்பித்தன. வேதத்திலே விக்கிரக வழிபாட்டுக்கு இடமேயில்லை. தீ வளர்த்தனர் - தீக் கடவுள் ஒருத்தன்தான் தெய்வம். அதற்குமேலே இந்திரன், வருணன் முதலானவர்கள். எதாக இருந்தாலும் 'ஸ்வாஹா' என்று அக்னியிலே போடுவது அந்த மரபு. அங்கே விக்கிரகத்துக்கு வழியில்லை.

இங்கே விக்கிரகத்தை வைத்தார்கள். அதற்கு மேலே அபிஷேகம் செய்தார்கள். வேதம் ஒத்துக் கொள்ளாத ஒன்று - விக்கிரகம் வைப்பதும், அபிஷேகம் செய்வதும்'. அதனால்தான் வேத வழியிலே வருகிற வைதிகர்கள் 'கல்லைக் கழுவு கிறவன்' என இவனைக் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்த அபிஷகத்தை மூவர் அற்புதமாகப் பாடினார்கள். யார் யார் அபிஷேகம் செய்தார்கள். அர்ச்சனை செய்தார்கள் என்பதை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார். இப்போது நாம் கோவிலுக்குப் போனால் குருக்கள்கிட்டே கொடுத்துவிட்டு வெளியே நிற்க வேண்டியதாக உள்ளது. ஞானசம்பந்தர் சொல்கிறார்.

செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை
தெரிந்த அவரோ
டந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய
அமர்கின்ற அரனூர்

(திருமுறை 3 பதிகம் 80 - 4)