பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 அ.ச. ஞானசம்பந்தன்


அடுத்தபடியாக மிக முக்கியமான ஒரு நல்ல காரியத்தைச் செய்தார். எந்த நல்ல காரியத்திலும் நாளாவட்டத்தில் குழப்பம் தோன்றத் துவங்கும்.

மிகப் பழைய காலத்திலே தத்துவங்களை வைத்து, க்ரியைகள், சடங்குகளை வைத்தார்கள். நாளாவட்டத்தில் தத்துவங்கள் மறைய க்ரியைகளும், சடங்குகளும் மிஞ்சிவிட்டன. "ஏம்பா இதைச் செய்கிறே?. என்னமோ பெரியவங்க செஞ்சுவந்தாங்க. நான் செய்கிறேன் என்பதாக அறியாமையினாலே நொந்து போகின்ற அளவுக்கு சடங்குகள் வளர்ந்து விட்டன.

சிவபூஜை முக்கியம். சிவபூஜை பண்ணுவதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தான். 'தங்கத்திலே லிங்கம் பண்ணி வச்சா இன்ன பலன் கிடைக்கும். வெள்ளியிலே பண்ணி வச்சா இன்ன பலன் கிடைக்கும். சிவப்புப் பூவைப் போட்டுப் பண்ணினா இன்ன பலன் கிடைக்கும்.' - இப்படியெல்லாம் மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். ஆக சிவபூஜை எங்கேயோ போய் பொன்பூஜை, வெள்ளி பூஜையாகிவிட்டது.

இந்த நிலையிலே நால்வர்கள் கூட இதைத் திட்டுகிறார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. திருநாவுக்கரசர் வயது முதிர்ந்தவர். நொந்துபோய்ப் பாடுகிறார்.

'மனத்திலே இறைவனை நினைந்து உருகிப் பாடினால் அவன் தானாகவே வந்து நிற்பான்:

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்

நெக்கு நெக்கு நினைக்கின்றான் என்றால் அப்படி இறைவன் பெயரைச் சொல்லும்போதே