பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 23

உருகிறானாம். அப்படி சிவபூஜை பண்ணுகிறவர் இறைவனைத் தேடிப் போகவேண்டிந்தில்லை. இறைவன் அவன் மனத்தைத் தேடிப் போகிறான்.புக்கு நிற்கும் - தானே புகுந்து இருப்பான் என்று சொன்னவர் அடுத்த இரண்டு அடியிலே ஒரு போடு போட்டார்.

பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே

வஞ்சகன், திருட்டுப் பையனுடைய பூவையும் நீரையும் பார்த்து

நக்கு நிற்பன்

என்றார். 'தோலைக் கடிச்சு, துருத்தியைக் கடிச்சு வேட்டை நாயாயிற்று' என்று சொல்வாரகளே அது போல பலரையும் ஏமாற்றி, என்னையும் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டாயே மகனே, என்று ஆண்டவன் சிரிக்கின்றானாம். அது மட்டுமல்ல. 'அவர் தம்மை நாணியே' நிற்பன் என்றார். 'உன்னைப் படைச்சேனே நான்' என ஆண்டவனுக்கே வெட்கம் பிடுங்கித் தின்கிறது. 'வஞ்சகனுடைய பூவையும், மலரையும் பார்த்து ஆண்டவன் வெட்கப்பட்டுப் போகிறான் என்று நாவரசர் பெருமான் சொல்லுவார்.

ஆக, வெறும் சடங்கு சம்பிரதாயம் என்பது அதிகப்பட்ட காலத்திலே நால்வர்களும் சாடியிருக்கிறார்கள். இல்லையென்று சொல்வதிற்கில்லை. ஆனால் திருநாவுக்கரசர் போன்றவர்கள் கொள்கை வேறு; வந்த காரியம் வேறு. ஆக, போகிற போக்கில் சாடிவிட்டு போனார்கள்.