பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 25

 இறை எண்ணத்தையோ தவிர்த்தார்கள் என்று நினைப்பது பெருந் தவறு. அதனுயை அடிப்படையில் இருக்கின்ற தவற்றை எடுத்துக் காட்டினார்கள்.

சமுதாயத்திலே நாலு பேரோடு பழகுகிற போது அங்கே நீ குளிக்காமல் போனால் அது நன்மை இல்லை. கெடுதல். ஆகவே நீராடு என்றால், குளிக்கிறதையே ஒரு சாத்திரமாக்கி, ஒரு சம்பிரதாயமாக ஆக்கி, அதற்கு ஏதோ சடங்குகளை வைத்துக் கொண்டு முங்கி முங்கி எழுந்திருக்கிறதுதான் - தண்ணிரிலே குளிக்கிறதுதான் புண்ணியம் என்றால் திட்டுகிறார்கள் சித்தர்கள். திட்டாமல் என்ன செய்ய முடியும்?

அதற்குமேலே எதனாலே லிங்கம் பண்ணுவது, அதற்கு எந்தப் பூவைப் போட்டுப் பூசை பண்ணுவது? இந்த சாஸ்திரம் ஜாஸ்தியாகி சிவபூஜையே மறக்கப் பட்ட காலத்திலே சித்தர் பாடுகிறார். எல்லோருக்கும் தெரிந்த பாட்டுதான்.

நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பஞ் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று
சொல்லு மந்த்ர மேதடா ?

'ஒகோ, இவர் பிற்காலத்திலே வந்த கடவுள் இல்லை என்கிறவர் கட்சி போல இருக்கிறது என்று தயவு செய்து நினைத்திட வேண்டா.

நட்ட கல்லும் பேசுமோ

என்பது வரை இவர்களும் கேட்கிற கேள்விதான்.

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினார்

என்பார் மாணிக்கவாசகர்.