பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 31


ஆக 'கல் என்பது அடையாளம் - குறியீடு. இங்கு எப்படி நிழற்படம் நம் நினைவை அவர்களிடம் கொண்டு செல்வதற்கு உதவுகிறதோ அதுபோல.

குறிக ளும் அடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஒதிலும்
பொறியி லீர்மன மென்சொல் புகாததே

என்று சொல்லுவார் திருநாவுக்கரசர். இது குறிகள், அடையாளங்கள் என்று தெரிந்துகொண்ட பிற்பாடும் இவற்றை வழிபடுவதில் தவறில்லை. அதை வலுவாக இந்தச் சமுதாயத்திற்கு இடித்துச் சொல்வதற்காகத் தான் சித்தர் பெருமக்கள் தோன்றினார்கள். அதுமட்டு மல்ல. இடைக்காலத்திலே சாதி சமயத்தைச் சாடி, விக்ரக வழிபாட்டையும் ஓரளவு சாடி பழக்க வழக்கங் களையும் சாடினார்கள். அதற்குமேலே சமுதாயத்திற்கு மாபெரும் நன்மையைச் செய்யத் தொடங்கினார்கள். அதனையும் சற்று விரிவாக நாம் காணவேண்டும்.

திருக்கோயிலுக்குப் போகிறவர்கள் தனியாகப் போக முடியாது. ஊரிலுள்ள பலரும் வருவார்கள். சமுதாயம் முழுவதும் ஒன்றாகக் கூடுவதற்குரிய இடம். பழைய காலத்திலே திருக்கோயில்கள் இறைவனை வழிபடுவதற்குரிய இடமாக மட்டுமே இல்லையே. அதுவே ஆதுலர்சாலையாக இருந்தது. அதுவே மருத்துவமனையாக இருந்தது. அதுவே பள்ளிக்கூடமாக இருந்தது. அதுவே சொற்பொழிவு மேடையாக இருந்தது. அந்த கிராம சமுதாய மக்கள் கூடி பஞ்சாயத்துப் பேசுகின்ற இடமாகவும் இருந்தது. ஆன்மா மட்டும் லயிக்கின்ற இடமாக இல்லாமல் சமுதாய மக்கள் அனைவரும் கூடும் இடமாக