பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 . அக. ஞானசம்பந்தன்


அமைந்ததுதான் பழைய திருக்கோயில்களுக்குள்ள தனிச் சிறப்பு.

திருவொற்றியூர் கல்வெட்டு முதலானவற்றைப் பார்த்தோமானால் தமிழ்நாட்டுக் கோயில் எந்த அளவுக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் ஊடாடி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தனிப்பட்ட மனிதன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும் அவன் வீட்டில் கூடுவது என்பது ஒரு சிலருக்குப் பிடிக்கும். ஒரு சிலருக்குப் பிடிக்காமல் போய்விடும். ஆகவே சமுதாயத்தார் என்ன செய்தார்கள் ? விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரும் ஒன்றாகக் கூடுவதற்கு கோயில் வாயிற் படிதான் சிறந்த இடம். ஆகவே அதற்கு மன்று என்று பெயர் வைத்தனர். இன்றைக்கு அந்த மன்று என்ற சொல் மறைந்து 'மந்தை' என்றாகிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் மந்தை, சாவடி என்று சொல்லுவான். மந்தை என்றால் ஏதோ ஒரு காளி கோயில் இருக்கும். எல்லோரும் வேறுபாடற்றுக் கூடுகின்ற இடம். சமுதாய மக்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுகின்ற இடத்திலே ஒருத்தன் குளிக்காமலோ, தூய்மை இல்லாமலோ போனான் என்றால் அவன் பிரச்சினைக்குரியவன் ஆகிவிடுவான். ஆகவே கோயிலுக்குப் போகவேண்டுமென்றால் கண்டிப்பாகக் குளித்துவிட்டுப் போகவேண்டுமென்று வைத்தார்கள். இது நாளாவட்டத்தில் என்ன ஆகிவிட்டது? ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துவிட்டு, குளித்துவிட்டுப் போனாலும் போதும் என்று நினைத்தானே தவிர, தூய்மை காரணமாக இது சொல்லப்பட்டது என்பதை