பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 அ.ச. ஞானசம்பந்தன்


ஓதினாலும், நீறு பூசினாலும், பிதற்றினாலும் பிரான் இரான் என்று. என்ன செய்ய வேண்டும்?

உருக்கி நெஞ்சை உள்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே,

சுருக்கமற்ற சோதி வடிவாக இருக்கிறான் இறைவன். அவன்

நெக்கு நெக்கு நினைபவர் செஞ்களே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்

என்று நாவுக்கரசர் பிரான் சொன்னாரே, அதையே தான்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது

என்று ஞானசம்பந்தர் சொல்லுவார்.

சித்தர்களும் நமச்சிவாய என்ற அஞ் செழுத்தைப் பெரிதுபடுத்திச் சொல்லுவார்கள். ஆனால் அஞ்செழுத்தைச் சொல்வதற்கு வழிதுறைகள் சொல்லுவார்கள்.

ஒரு எட்டு குயர் நோட்டை வாங்கி ஓம் நமச்சிவாய' என்று ஒரு கோடி தடவை எழுதி விடுகிறான். எழுதுபவன் என்ன செய்கிறான்? ஒவ்வொரு பக்கத்தினுடைய அடியிலும் கோடு போடுகிறான். இதோடே இத்தனை ஆச்சு, இதோடே இத்தனை ஆச்சு என்று. ஆக ஆண்டவன்கிட்டே இவன் வியாபாரம் செய்கிறான். எண்பதாயிரம் எழுதிட் டேன், இப்போ என்ன தர்ரே, ஒரு லட்சம் எழுதிட்டேன். இன்னும் பார்க்காம இருக்கிறாயே. இதை சித்தர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.