பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 அ.ச. ஞானசம்பந்தன்


சொன்னார்கள். அதற்கு மேலே வழிபாட்டு முறையைச் சாடுகிறார் சிவவாக்கியர்.

'கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ச்சிடுந்த ராக்களில்
வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின் தொல்லையற்றி டப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்

'

ஸ்படிக லிங்கம் சார், அதிலே பூஜை பண்ணினா மதிப்பு அதிகம். கண்ணாடி லிங்கத்துக்கும், ஸ்படிக லிங்கத்துக்கும் இப்படி வித்யாசம். தங்கம் மதிப்பு ஜாஸ்திதான். ஆக அதை வைத்துப் பூஜை பண்ணினால் அதற்கேற்றபடி பலன் என்று நம்புகிற நிலை வந்துவிட்டது.

ஒரு காலத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் தங்கலிங்கத்தை வைத்து வழிபட்டுக்கொண்டிருந்த போது மற்றொரு நண்பர் சொன்னார், ‘எப்பவாவது உனக்குப் பூஜையிலே மனம் ஈடுபடுமா?. 'ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?

'வச்சிருக்க தங்கத்தை யாராவது துரக்கிக் கொண்டு போய்விடுவானே என்கிற நினைவுதானே உனக்கு இருக்கும்' - அப்போது தங்கத்தின் விலை 48 ரூபாய்தான். இருந்தாலும் இந்த நினைவுதானே உனக்குருக்கும் என்று. இதை அவருக்கு முன்னாலே வியாக்யான கர்த்தாக்கள் சொன்னார்கள், 'செருப்பை வைத்து திருமால் தொழப் போனாற்போலே' என்று.

புதிசா வாங்கின செருப்பைக் கோயிலுக்கு வெளியே வைத்துவிட்டு ஆண்டவனைக் கும்பிடப் போனா, ஆண்டவன் நினைவா வருகிறது இவனுக்கு. அதை யாராவது தூக்கிக் கொண்டு போய்விடுவார்களோ என்றே நினைப்பான்.