பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 அ.ச. ஞானசம்பந்தன்


மாதர்தோள் சேராத தேவர்
மாநிலத்தில் இல்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்
வாழ் சிறக்கும்

ஆக இல்லற வாக்கைதான் மிகச் சிறந்தது என்று பேசுவார் சிவவாக்கியர்.

வருவிருந்தோ டுண்டுடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோ னீசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே

என்று பேசுவார்.

'இல்லற வாழ்க்கை நடத்தி, வர்றவங்களுக் கெல்லாம் சாப்பாடு போட்டீன்னா, வந்து சாப்பிட்ட வங்களிலே ஒருவேளை யாராவது ஒருத்தன் ஈசனாகக் கூட இருக்கலாம்'

இளயான்குடிமாறனார் உணவு அருத்தினார் அல்லவா? அதுபோல வருகிறவர்களுக்கு எல்லாம் உணவு அருத்துவது என்ற ஒரு கொள்கையோடு இருப்போமேயானால், மிக உயர்ந்தவர்கள்கூட வந்து சிக்கிக் கொள்வார். ஆக திருமூலர் சொல்லுவார்.

திலம் அத்தனை சிவஞானிக்கு ஈந்திடில்

என்று சொல்லுவார். திலம் - எள்ளு. மூன்று பிறப்புக்கும் இது உதவும் என்பார்.

சரி, எங்கே போய்ச் சிவஞானியைத் தேடிப் பிடிப்பது? எதை எடுத்தாலும் போலி - இப்போ ரூபாய் நோட்டிலே போலி வந்தமாதிரி மனிதர்களிலே போலி. சிவனடியாரை எங்கே தேடிப் பிடிப்பது? அதிலும் சிவஞானியை எங்கே தேடிப் பிடிப்பது?