பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 41


'மகனே செளக்கியமா இல்லற வாழ்க்கை நடத்து. வருவிருந்துக்கு எல்லாம் சோறுபோடு. வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் என்று பேசுவார்.

இனி பூசை செய்வதற்கும் வழி சொல்லுவார்.

ஆசைகொண்ட னுதினமும் அன்னியர் பொருளினை
மோசஞ்செய்த பகரிக்க முற்றிலும்ம லைபவர் பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினில் எழுநரகைக் காத்திருப்ப துண்மையே

"என்னப்பா அங்கே உட்கார்ந்துகிட்டு மறுமறுங்கறே. அடுத்தவனை எப்படி க்ளோஸ் பண்ணலாம்னு கணக்குப் போடறயா? காசினியில் ஏழ் நரகுக்குப் போவதைத்தவிர வேறு வழியில்லை என்று சொல்லுவார்.

'தான் என்ற ஆணவத்தை நீக்கமாட்டார். சண்டாளக் கோபத்தை நீக்கமாட்டார். ஊன்கண்ட சுகபோகம் ஒழிக்கமாட்டார். எப்படி ஐயா வீட்டுப் பேற்றை அடையப் போகிறார்? என்று சட்டைமுனி பேசுவார்.

இனி ஒருவகையாக எல்லாக் காலத்திலும் இருக்கின்றவர்கள் இந்தச் சித்தர்கள் என்று கண்டோம். சமுதாயத்திற்கு வாழ்வளிப்பதற்காக வந்தவர்கள் என்று கண்டோம். நிர்க்குணமாக இருக்கின்ற இறைப் பொருளினுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அங்கங்கே தோன்றியவர்கள் என்று கண்டோம். இதற்குமேலே இவர்களுடைய ஆற்றலையும்பற்றி ஓரளவு காண வேண்டும்.

சித்தர்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றார்கள். இருக்கின்றார்கள் என்று நிகழ்காலத்திலே