பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 அ.ச. ஞானசம்பந்தன்


ஐந்து வயதுக் குழந்தை ஒரு கிலோகிராம் துரக்குவது என்பது முடியாத காரியம். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இருபது வயது வாலிபனுக்கு அது மிக எளிதான காரியம். இருபது வயது வாலிபன் ஐந்து வயதுக் குழந்தையை, - துாக்க முடியவில்லை என்றாலும் அதை எள்ளி நகையாடுவதும் அறியாமை, இதைக் கூடவா தூக்க முடியவில்லை என்று. ஐந்து வயதுக் குழந்தை ஒரு கிலோ கிராமைத் துரக்குவதைப் பார்த்தோ, இருபது வயது வாலிபன் அந்தக் குழந்தையைத் துரக்குவதைப் பார்த்தோ மாபெரும் செயல் என்று நினைப்பதும் அறியாமை. அதுபோல - செயற்கரிய செய்வார் பெரியர் என்று வள்ளுவப் பேராசான் சொல்லுகிறானே - செயற்கரிய என்று எதுவுமே உலகத்தில் கிடையாது. நம்முடைய மனோ நிலையிலே இது செயற்கரியது. மேலே போகும்போது இது சாதாரணமாகப் போகிறது.

கீழே தரையில் இருந்து பார்த்தால் நாலு சுவர் தெரிகிறது. லைட் ஹவுஸ் மேலே நின்று பார்த்தால் ஊர் முழுவதும் தெரிகிறது. நாற்பதாயிரம் அடிமேலே போகிறபோது செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம் வரை தெரிகிறது. அதுபோல் மேலே போகப்போக இது சாதாரண சமாசாரம். ஆக செயற்கரிய செய்ல் என்றோ, உலகத்தில் நம்பமுடியாத் செயல் என்றோ எதுவும் கிடையாது. அவரவர்கள் நிலையிலே அததனைச் செய்ய முடிகிறது. பொதுவாகச் சித்தர்கள் என்ன செய்ய முடியும் என்று 'பாம்பாட்டி' பாடிக் காட்டுவார்.

தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
துரும்பைப் பெருந் தூணாகத் தோன்றச் செய்குவோம்
ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணுமாகச்
செய்குவோம்