பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 அ.ச. ஞானசம்பந்தன்


ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னாலே ஒரு ஐந்து வயதுப் பையன் அங்கப்பிரதட்சிணம் செய்து வரவேண்டுமென்று முடிவு செய்தார். பிற்பகல் பன்னிரண்டேகால் மணிக்கு. சாதாரண மனிதர்களால் கூட காலை வைத்து நடக்க முடியாத உச்சி நேரத்தில் இந்தப் பையன் அங்கப்பிரதட்சிணம் வரவேண்டுமென்றால் நடக்கிற காரியம் இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு துணிச்சலோடே அங்கப்பிரதட்சணம் வா என்று சொன்னார்கள். பையன் கீழே விழுந்தான் - உருண்டான் - மணல் - திறந்தவெளி - வெயில் அடிக்குது எல்லோரும் பார்த்தார்கள். இறுதியாக அங்கப்பிரதட்சணம் முடிந்த பிறகு அந்த சித்தர் பேசுகிறார். 'குழந்தையை வா' என்று சொன்னால் அவனுக்குரிய கடமையைச் செய்து தருவது என் கடமை. வெயிலைக் குளிர்ச்சியாக்குவது சாதாரண சமாசாரம்.

ஆடிப்பூரத்துக்கு முதல்நாள் மழை என்றால் நம்ப முடியாத மழை. முழங்காலளவு தண்ணிர் ஒடிக் கொண்டிருக்கிறது. ஆடிப்பூரத்தையொட்டி சிலர் விழாவைக் கொண்டாட வேண்டுமென்று நினைத்தவர்கள் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்து வைத்துவிட்டு இந்த மழையைக் கண்டு பயப்படு கிறார்கள். ஒன்றுமே நடைபெறாமல் போய்விடுமோ என்கிற வருத்தம் அவர்களுக்கு. கவலை வேண்டாம். மழையை இந்த விநாடியே நிறுத்திவிடுகிறேன் என்றார் அந்தச் சித்தர். பூரம் முடிகின்ற வரையில் மழை இராது என்று சொன்னால் பூரம் முடிகிற வரையில் ஒரு சொட்டு மழை இல்லாமல் செய்ய முடிகிறது. ஆக இயற்கையை மாற்றுவது என்பது சித்தர்களுக்கு மிகச் சாதாரண சமாசாரம்.