பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3 கிழக்கும் மேற்கும்


'கிழக்கும் மேற்கும்', "உலகாயதமும் ஆன்மிகமும்” என்பன என்னை வியப்பில் ஆழ்த்தின.

மேற்கு, கிழக்கு என்று பிரிவினை செய்து பேசுவது நியாயமானதா? உண்மையில் மேற்கு, கிழக்கு என்ற பகுதிகள் பிரிவினை செய்யக்கூடிய முறையில் உள்ளனவா? மேற்கு, கிழக்கு என்பன இல்லை’ என்பதனை நான் சொல்லி, நீங்கள் அறிய வேண்டிய நிலையில் இல்லை. எல்லாவற்றையும்விட வேடிக்கை என்னவென்றால், சென்னைப் பட்டினத்தார் செங்கற் பட்டாரைக் தெற்கத்தியார் என்பார். செங்கற்பட்டார் தென்னார்க்காட்டாரைத் தெற்கத்தியர் என்பார். தென்னார்க்காட்டார் தஞ்சாவூர்க்காரரைத் தெற்கத்தி யார் என்பார். இப்படித் தெற்கு என்பது விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பனவெல்லாம் ஒப்புநோக்குச் சொற்களே தவிர, அவை அடிப்படையான பொருள் பொதிந்தனவும் குறிப்பிட்ட பொருளை அல்லது பகுதியை உணர்த்துவனவுமாகிய சொற்களாகா என்பதும் புலப்படும். கவிஞன் பாரதி, புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே என்று எந்தத்