பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 53


உள்ளன என்று கூறியுள்ளார்கள். ஆனால், இவை அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போமே யானால் ஏதாவது ஒரு புதிய காட்சி கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

மக்கள் அனைவரும் ஆறறிவு படைத்தவர்கள் என்றாலும், அவர்களுள் அடிப்படை வேறுபாடு இல்லை என்றாலும், வாழ்க்கையின் குறிக்கோள் அவர்கள் வாழும் இடத்திற்கு இடம் மாறிவிடுகிறது. வாழ்வினைக் காணும் அடிப்படை நோக்கு முழுவதும் மாறுபட்டிருக்கும் காட்சியைக் கிழக்கிலும் மேற்கிலும் காண முடியும். உங்களிலே சிலர் நினைக்கலாம் - தொழில்துறை முதலானவற்றில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு முன்னேறியுள்ள அந்த நாட்டு மக்கள் நினைவு, செயல் முதலானவற்றிலும் மாறுபட்டு இருப்பதில் வியப்பில்லையே என்று. ஆனால், அது சரியன்று என்றுதான் தோன்றுகிறது. நம் சகோதர நாடான ஜப்பானியர்கள் கீழை நாட்டவராயினும் பொருளாதாரத் துறையில் அமெரிக்காவின் அடுத்த நிலையை எட்ட முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்றால் வியப்படைய மாட்டீர்கள். பொருளாதார அடிப்படையிலே மட்டுமல்லாமல் தொழிலாக்கப் பொருள்களைப் பற்றிக்கூட இருபத்தைந்து ஆண்டு கட்கு முன்னர், ஜப்பான் நாட்டுப் பொருள் என்றால் அது தரக்குறைவான பொருள் என்று எள்ளி நகையாடி வந்த மேலைநாடுகளில், இன்று ஜப்பான் நாட்டுப் பொருள்கள் நம்பமுடியாத அளவு பாராட்டப் பெறுகின்றன. ஜெர்மனியின் தலைசிறந்த நகரமாகிய ஃபிரான்க்பர்ட்டிற்குச் சென்று எளிதாகக் கையில் எடுத்துச் செல்லும் வானொலிப் பெட்டி வேண்டு மென்றால், அவள் காட்டும் முதல் மூன்றும்.ஜப்பான்