பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 அ.ச. ஞானசம்பந்தன்

 நாட்டில் உருவானவை என்பது தெரியவரும். புகைப்படக் கருவி வேண்டுமென்றால் ஜப்பான் நாட்டில் உருவான கேமிராக்களைத்தான் ஜெர்மனி நாட்டின் ஃபிரான்க்பர்ட்டில் காட்டுகிறார்கள். அவ்வளவு தூரம் தொழில் துறையில் ஜப்பானியர் முன்னேறியுள்ளனர். அவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ள ஜப்பான் நாட்டு உணவு விடுதியில் நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இரவு விடுதிகள் மிகுதியாக வளர்ந்துள்ள அந்த நாட்டில் காலை ஆறு மணிக்கு டோக்கியோவில் உள்ள ஹில்ட்டன் உணவு விடுதியில் பணிபுரியும் பணியாளர்கள் கூட்டாக வழிபாடியற்றும் வியப்பைக் கண்டேன். மாதா கோயிலில் வழிபாடு செய்வதுபோல மண்டியிட்டு மூக்கு தரையில் படுமாறு குனிந்து வழிபடுவதனைப் பார்த்தேன். அவர்களைக் கேட்ட போது நாள்தோறும் அவ்வாறு கூட்டாக வழிபாடியற்றும் பழக்கம் உண்டு என்று கூறினார்கள். தொழில் துறையில் முன்னேறி உலகச் சந்தையில் போட்டி போடும் அளவிற்கு முன்னேற்றம் பெற்று விட்டதனால் பழைய வாழ்க்கைப் பாதையிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றோ, பழமையான தங்கள் வாழ்க்கை முறையை விட்டுவிட வேண்டும் என்றோ தேவை இல்லை என்று காட்டவே இதனைச் சொன்னேன்.

எவ்வளவு முன்னேறியும் பழைய பழக்கங்கள் என்று எவற்றை எண்ணுகின்றனரோ, அவற்றை விட அவர்கள் முனைவதில்லை. இரவு விடுதிகளைப் போற்றி மேற்கொள்ளும் பழக்கத்தில் அமெரிக்கர் களிடம் கூடக் காணமுடியாத அளவு நவ நாகரிகத்தில் புரளும் ஜப்பானியர் பழைமை வாய்ந்த மரபுகளையும்