பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 63


உள்ளது. பொருள் வளம் என்ற கோட்டைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். விடுதலை பெறும் வேட்கை அதிகமானவுடன் காவி வேட்டி கட்டியவர்களை மகரிஷிகள் என்று எண்ணி அவர்கள் பின்னே ஒடுகின்றனர். அந்த நாடுகளில் அமைதியை நாடி ஓடும் வேட்டை நடைபெறும் அதே நேரத்தில், அதுவும் நம்மை நோக்கி அவர்கள் ஓடிவருவதைக் கண்டும் நம் ஊர்க்காரன் "பக்திமான் கண்டது பிரசாதம்” என்று கேலிக்கூத்து செய்கிறான். ஆம்! இந்தப் பக்திமான் கண்ட பிரசாதத்திற்கு மின்சாரங்கண்ட அந்தப் புத்திமான் ஓடிவருகிறான். என்றாலும், நம்மூரிலுள்ள பிரமுகர் - பிரசாதம், மின்சாரம் என்ற இரண்டையுமே காணாதவர் - இதனைக் கண்டு நகையாடுகிறார்.

'அங்கு எல்லாம் உள்ளன என்று நம்மில் பலர் நினைக்கின்றனர். நமக்கு மின்சாரம் என்றுகூடச் சொல்லத் தெரியாமல் மிஞ்சாரம் என்போம். ‘மின்சாரம் என்று சொல்லத் தெரியாமல் மிஞ்சாரம்' என்று கூறுகின்ற நம்மூர் விஞ்ஞானி இருக்கிறானே இவன், 'அந்த நாடுகளில் எல்லாம் வளர்ந்திருக்கின்றன, நம்மிடம் எந்த வளர்ச்சியும் இல்லை என்று கதைக்கிறான். ஆனால், உண்மையிலேயே மின்சாரம் கண்டுபிடித்த அந்நாட்டான் அறிவாற் கண்ட அப் புதுமைகள் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும்' தருதற்கு வல்லமையற்றன என்றும், அவை தருகின்றவற்றிற்கு அப்பாற்பட்டும் வாழ்வில் பெற வேண்டியவை உள்ளன என்றும் ஏங்குகின்றான். அணுவைப் பிளந்து புரோட்டான், எலக்ட்ரான், பாசிட்ரான் எல்லாம் கண்டுபிடித்த அவன், இவற்றை யெல்லாம் கண்டபின்னரும் மனத்தில் அமைதி