பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 அ.ச. ஞானசம்பந்தன்


பெறவேண்டுமானால் வாழ்வில் துறவு கொள் வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வருகின்றான். எவ்வளவுதான் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பலவற்றைப் பெற்றாலும் அதற்கு மேல் மனத்தில் அமைதி பெற இயலவில்லையே என்ற கவலை, வருத்தம் அவர்களைச் சூழ்ந்து கிடப்பதனைக் காண்கின்றோம்.

கோடீசுவரருடைய பிள்ளைகள் இரண்டு (ஒரு பையனும் ஒரு பெண்ணும் ஏழைகள் வாழும் இரண்டு குடிசைக்குத் தீ வைத்து வேடிக்கை பார்க்கும் நிலைமையை அங்கு காணுகிறோம். அப் பிள்ளைகள் நினைத்தால் அழகிய கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தர முடியும். ஏன் அவ்வாறு தீ வைத்தனர், அதற்குரிய மனநிலை என்ன - என்று அறியும் நோக்கத்தோடு 'டைம் பத்திரிகை நிருபர் "ஏன் தீ வைத்தீர்கள்” என்று கேட்டபோது "எங்கட்குச் சலிப்பாக இருந்தது (We are bored); எனவே, சலிப்புத் தீர்ந்து ஒரு மாறுபாட்டைக் காணத் தீ வைத்தோம்" என்றனர். அவர்கட்கு வாழ்க்கை பெருஞ் சலிப்பாக உள்ளதாம்! என்னுடைய வீட்டில் இருந்துகொண்டு இதற்கு விளக்கம் காண முயன்றேன். என் மக்கள் மருத்துவத் துறை, விஞ்ஞானத்துறை போன்ற துறைகளில் கற்று வருகின்றனர். அதைதவிர வாழ்வில் வேறு ஒன்றும் இருப்பதாக அவர்கட்குத் தெரிவதில்லை. எனவே, அவர்களிடமும் இந்த போர் (bore) என்ற சொல்லை அடிக்கடி கேட்கின்றேன். இன்று நம் நாட்டிலும் குழந்தைப் பள்ளி முதல் குமரர் கற்கும் பல்கலைக் கழகம் வரை இச் சொல் பயின்ற சொல்லாக இருக்கக் காணலாம். இந்த நிலை மிகவும் தீய அஞ்சத்தக்க நிலை