பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ல் அ.ச. ஞானசம்பந்தன் விட்டால் அப்புறம் அதனோடு அமைதி அடைந்து விடுவதில்லை; வேறு ஒன்றை நாடுகிறது. மனித மனம் மிகவும் விநோதமானது. இதனை அறிந்து கொள்ளப் பெரிய மனோதத்துவ அறிஞனை நாடிக் கேட்க வேண்டா. நானூறு ஆண்டுகட்கு முன்னர்க் கோவையை அடுத்த பேரூரிலே வாழ்ந்த சாந்தலிங்க சுவாமிகள் இதனை "அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப் பெறாதன விரும்பும் உயிர்கள்" என்று கூறி விளக்கியுள்ளார். மிகவும் இடர்ப்பட்டு ஒரு பொருளைப் பெற்றாலும், பெற்ற பிறகு அதன்மேல் ஆசை அடங்கிவிடுகிறது. ஆகவேதான், பொருளா தாரத் துறையில் இவ்வளவு மேலுTர்ந்து சென்றுவிட்ட மேலைநாட்டவர்களால் அதில் இன்பம் காண முடியவில்லை. வாழ்வில் நிறைவு பெறக் கீழை நாட்டாரிடம் ஏதாவது பெற இயலுமா என ஏங்கி நம்மை நாடி வருகின்றனர். இங்கே உள்ளவர்கள் 'வானளாவிய வீடுகளைக் கட்டிவிட்டதனால் மட்டும் பயனில்லை என்பதையும், அத்தகைய வீடுகளைக் கட்டுவதற்கு முன்பும் மனிதன் வாழத்தான் செய்தான் என்பதையும், அவை அணுகுண்டினால் அழிக்கப் பட்டாலும் அதற்குப் பின்பும் வாழத்தான் போகிறான் என்பதையும் அறிந்து, இறுதியாக மனித வாழ்க்கையின் குறிக்கோள் இந்த இரண்டிலும் இல்லை, இவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதையும் நினைக்கின்றார்கள். இந்த அடிப்படையின் வேறுபாடு மேற்கிலும் கிழக்கிலும் விளங்கக் காண்கின்றோம். இந்த வேறுபாடு ஏதோ புதிதாக வந்தது என்று யாரும் நினைத்துவிட வேண்டா.