பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வ8 அ.ச. ஞானசம்பந்தன் களையும், கன்பூசியஸ் கோவில்களையும் இடித்து விட்டால் அவர்களின் சமய நம்பிக்கையை அடியோடு மாற்றி விடலாம் என்று முயன்றார். அதில் அவர் தோற்றுவிட்டதை உணர்ந்து கொள்ள அதிக காலம் ஆகவில்லை. நம்நாட்டில்கூடப் பிள்ளையாரையும், இராமரையும் எடுக்க முனைந்து கையும் வாயும் சலித்து விட்டு விட்டோம். ஆனால், பிள்ளையார் போனாலும், புத்தன் போனாலும் வேறு ஒன்றை அங்கே அமைப்பதால் பெயர் மாறுமே தவிரக் கீழை நாடுகளில் சமய நிலை மாறாது. ஒரு பிள்ளையார் சிலைக்குப் பதிலாக ஞானசம்பந்தன் சிலையை வைப்போம்! அவ்வளவுதான். மனித மனம்பற்றி ஆராய்ந்து கார்லைல் தாம் எழுதிய "வீரரும் வீரர் auß umrGub" (“Heroes and Hero Worship") ersörp GraWab அழகாகக் குறிப்பிடுகின்றார். ஒன்றைப் பெரிது என்று எண்ணி ஓடுகின்ற மனம் அதனை விட்டுவிட்டால் இன்னொன்றைப் பெரிதெனப் பின்தொடரும் என்பதனைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த அடிப்படையான மன இயல்பினை எவ்வாறு மாற்றுவது? x கிறிஸ்தவ சமயத்தின் முன்னரும் பின்னரும் உள்ள தத்துவக் கொள்கைகளே மேற்கு நாடுகள் இன்றைய நிலையை எய்துதற்குத் துணையாயமைந்தன. எதை எடுத்தாலும், அறிவின் துணைகொண்டு ஆராயத் தொடங்கினார்கள். அந் நாட்டுத் தத்துவக் கொள்கையாளரும் அதற்கு ஏற்றபடியே விளங்கினர். ஹேகல், லார்க், ஹியூம் இப்படி வரிசை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தத்துவக் கொள்கைகளை வளர்க்கத் தொடங்கினார்கள். விஞ்ஞானத்தில் காணப்படும் பல