பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 69 சொற்கள் கிரேக்க மொழியிலும், லத்தீனிலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். பிளாட்டோ காலத்திலிருந்தே விஞ்ஞான அடிப்படையில் தத்துவத்தை ஆராயத் தலைப்பட்டு விட்டார்கள். இந்த மரபில் தோன்றியதுதான் கிறிஸ்தவ சமயம். அதற்கு ஏற்றபடி, "கடவுள் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன, இரண்டுக்கும் என்ன தொடர்பு? - இப்படிப் பட்ட ஆராய்ச்சியே மிகச் சிறந்தது என்ற கருத்தில், கணித அடிப்படையில் ஆராய்ச்சி செய்தனர். அரிஸ்ட்டாடில் காலத்தில் முன்னவர் கண்ட கணித உண்மை மாறவே உலகைப்பற்றிய கருத்தும் முற்றிலும் மாறுபட்டு விட்டது. பிளாட்டோவில் கணித இயலின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட சமயமும் மாற்றத்திற் குள்ளாகியது. அப்போதைய கிறிஸ்தவ சமயம் என்றால், ரோமன் கத்தோலிக்க சமயம் ஒன்றே; புராட்டஸ்டண்ட் பிரிவு அப்போது இல்லை. விஞ்ஞானப் புதுமைகள் தோன்றும்போது அதன் அடிப்படையில் வளரும் சமயமும் மாறுகிறது. அதன்படி பிளாட்டோ காலத்துச் சமயமும் மாற்றத்திற்குள்ளாகியது. அவர்கள் சமயம் கட்டப்பட்டது விஞ்ஞான அடிப்படைமீதாகும். அவர்களுடைய கணித பூர்வமான சில கொள்கைகள் மாறினவுடன் சமயமும் ஆட்டம் கண்டது. அதற்குத் தோமிசம் என்பது பெயர். அந்தத் தோமிசக் கொள்கையார் அரிஸ்ட்டாடிலின் விஞ்ஞானக் கோட்பாடுகள் மீது சமயத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அது தீர, லாக்கே என்ற தத்துவ ஞானி பேருதவி புரிந்தார். அந்த நாட்டுச் சமயக் கொள்கை வளர்வதற்கு நியூட்டனுடைய உற்ற நண்பராகிய லாக்கே எவ்வளவு பெரிய அற்புதமான காட்சியைக் காணுகிறார்! அவர் காலத்தில்தான் இது