பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அ.ச. ஞானசம்பந்தன் விரிவடைகிறது. அதற்கு முன்பு கடவுள் என்பவர் ஆகாயத்தில் இருப்பவர் என்றும் அவருடைய தம் கால்களைப் பூமியின்மீது தொங்கவிட்டுக் கொண் டிருக்கிறார் என்றும் நினைத்தார்கள். அறிவு பூர்வமாக வாழ்ந்து ஆராயத் தொடங்கினார்கள். மூன்று பொருள்கள் யாரும் இல்லையென்று சொல்ல முடியாதபடி அமைந்துவிடுகின்றன! காணுகின்றவ னாகிய நான், காணப்படும் பொருளாகிய இந்த ஒலிவாங்கி, எங்களிடையே இருக்கும் உறவு. காண்பவனாகிய நான், காட்சியாகிய மீடியம் (medium), காணப்படும் பொருளாகிய ஒலிவாங்கி என்ற மூன்றும் உள்ளன; அப்படியானால் பொருளின் இயல்பு என்ன? இதுபற்றிய விரிவான ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த நாட்டில் அத்வைத மதத்தின் தந்தையாக உள்ள ஆதிசங்கரர் இந்த ஆராய்ச்சியை எடுத்துக் கொண்டு பொருள்களை ஆராய்தார். இவை அனைத்தும் மித்தை என்று முடித்துவிட்டார். பொருள் என ஒன்றும் கிடையாது. "எல்லாம் பொய் என்றால் - கண்ணால் பார்க்கிறேன், ஒலியை வாங்குகிறது, வாங்கிப் பெரிதுபடுத்துகிறது! இதை எப்படி நீ மித்தை என்று சொல்லலாம்' என்ற வினாவைச் சிலர் எழுப்பினர். "ஐயா, பழுதையைப் பாம்பு என்று எண்ணுகின்றவனும் இருக்கத்தானே செய்கிறான்? கனவில் ஆடுவதாகவும், ஒடுவதாகவும் நினைக்கும் நீங்கள், படுக்கையில் இருந்தே காலை உதைத்துக் கொள்வதில்லையா? இதற்கும் நீ காணும் இப் பொருளுக்கும் வித்தியாசம் இல்லை. இது மாதிரி ஒரு பொருள் உலகில் கிடையாது. பரந்து விரிந்து காணப்படும் இவ்வுலகம் உன் காட்சியளவே தவிர உண்மையில்லை. இது மரம் என்று பார்ப்போமானால் மரமாக இருக்கிறது, அவ்வளவுதான். இதனையே