பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 அ.ச. ஞானசம்பந்தன் கடவுட் பொருள் மறைந்துவிடுகின்றது; ஞானியி னுடைய பார்வையோ மாறிவிடுகின்றது. இது என்ன என்று கேட்டால் 'பிரமம்' என்பான். அது? அதுவும் பிரமம். எல்லாவற்றையும் பிரமமாகவே கா கின்றான். எல்லாம் பிரமமாகக் காட்சியளிக்கும்போது வேறுபாடு மறைந்துவிடுகின்றது. இந்த உண்மையை இந்த நாட்டுக்காரர் எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாகப் பேசினார்கள். இந்த உண்மையை நியூட்டன் காலத்தில் லாக்கே என்பவர் ஆராயத் தொடங்கினார். ஆராயத் தொடங்கியவர் காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்ற மூன்று பொருளைக் கண்டு, ஓர் அற்புதமான முடிவுக்கு வந்தார். அவர் நாட்டின் வளர்ச்சியே.அதில் அடங்கிவிட்டது. இது என்ன? இது மைக்! இதன் நிறம் என்ன? வெண்மை. வெண்மை என்ற ஒன்றே இல்லை. மைக் என்றோ, வெண்மை நிறம் என்ற ஒன்றோ இல்லை என்றார் லாக்கே. எப்படி? பார்க்கிறேன், உணர்கிறேன், அனுபவிக்கிறேன் - எப்படி இவற்றை இல்லை என்று சொல்ல முடியும்' என்று கேட்டால், அவர் சொல்வார் "அப்பா, உன் கண்ணாகிய புலன் பட்ட பிறகு அதற்கு இந்த வெண்மை நிறம் தோன்றிற்று. ஒரு நாய் இதனைக் கண்டு இது வெண்மை என்று நினைக்கிறதா, இல்லையே! இதனை மைக் என்று நினைக்கவில்லை. ஆகவே, இதற்கென்று தனியே ஓர் இயல்பு கிடையாது. காண்பவனுடைய மனோ நிலைக்கு ஏற்ப இதற்கு ஒரு வடிவு, நிறம், பண்பு ஆகியன ஏற்படுகின்றன என்றார். சங்கரருடைய கொள்கையோடு இது மிகவும் தொடர் புடையது. பொருளுக்கு என்று தனி இலக்கணம் இல்லை. உன் மனத்தில் பட்டவுடன் சில