பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



vii

 ஆணித்தரமாகக் கூறிச் சென்றார். இன்று நம்மைப் பிடித்து ஆட்டும் மன இறுக்கம் மனத்துக்கண் தோன்றிய மாசு காரணமாகத் தோன்றியதாகும். இதனைப் போக்க வழி யாது? அதற்கும் வழி கண்டனர் நம் முன்னோர். போட்டியும் வேகமும் நிறைந்த வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நாம் நம் முன்னோர் கூறிய இவ்வழியைச் சிந்திக்க மறந்து விட்டோம். ஒருசிலர் சிந்திக்க மறுத்தும் விட்டனர். அந்த வழி யாது என்பதைக் காண முற்படலாம்.

நம் முன்னோர் பலர் மெய்ஞ்ஞானிகளாகத் திகழ்ந்ததோடு அல்லாமல் விஞ்ஞானிகளாகவும் இருந்தனர் என்பதை ஆழ்ந்து நோக்குவோர் எளிதில் அறிய முடியும். ஒலியின் (Sound) பெருமையை, சிறப்பை, ஆற்றலை இன்றைய விஞ்ஞான உலகம் காண்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே நம் முன்னோர் அறிந்திருந்தனர். ஒலி (Sound) அலைகளாகச் சென்று பரவுகிறது. ஒவ்வொரு எழுத்திற்கும் உச்சரிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அதிர்வு (Frequency) உள்ளது. இந்த அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழும் ஒலியை (Hertz) என்ற அளவு கொண்டு கணக்கிடுவர். ஐயாயிரம் ஹெர்ட்ஸ்க்கு குறைந்த ஒலிகளையும், இருபத்தி யிரண்டாயிர ஹெர்ட்ஸ்க்கு மேற்பட்ட ஒலிகளையும் நம் செவிகள் கேட்கமுடியாது. ஆனால் அக்குறைந்த ஒலியை எலிகள் முதலியன கேட்கும். அம் மிகுந்த ஒலியை வேட்டை நாய்கள் கேட்கும். நம் செவி முதலிய பொறிகளின் சிறப்பு இவ்வளவுதான். ஆனால், ஒலி மாபெரும் வலிமையுடையது என்பதை இற்றை நாள் விஞ்ஞானம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது. மிகு அதிர்வு ஒலி (Ultrosound) என்னென்ன புதுமைகளைச்