பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அ.ச. ஞானசம்பந்தன் எத்தனை மாறுதலுக்கு ஆளாகியிருக்கிறது! வேறு வேறு நாடுகளுக்கு இடையில் ஏசுவினுடைய சமயம் எத்துணை மாறுதல்களுடன் இருக்கிறது! ஏசுவின் ஒரே போதனையைக் கொண்டு இத்தனை வழிபாடு முறைகள், சமயங்கள் தோன்றக்கூடுமா? விஞ்ஞான அடிப்படையில் தத்துவத்தைக் கட்டியதால் விஞ்ஞானம் ஆட்டம் காணும்போது புதிய தத்துவத்தைக் கற்பிக்கத் தொடங்குகின்றனர். அது சரியா, தவறா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கப் போவதில்லை. மேற்கே உள்ள நாகரிகம் வளர்வது இந்த அடிப்படையில்தான் என்ற அளவில் விட்டு விடுகின்றேன். இனி, கீழை நாடுகளில் பார்ப்போமேயானால் முற்றிலும் மாறுபட்ட ஒர் அடிப்படையைக் காண முடியும். புத்தர் என்ன சொன்னார்: "இது ஒலிவாங்கி, அதைப்பற்றி ஆராய வேண்டுமா? உனக்கு என்ன கவலை?” என்று கேட்கிறார். 'உனக்கு என்ன தேவை? நீ பேசும் பேச்சைப் பெரிதுபடுத்த வேண்டும். அவ்வளவுதானே? அதற்கு அது உபயோகப்படுகிறது. அவ்வளவுதான்! இருக்கும்போது அதனைப் பயன் படுத்திக்கொள். இது கெட்டுவிட்டால் சரி செய்ய வேண்டுமே என்று கவலைப்படாதே. போனால் போகிறது என்று விட்டுவிடு' என்றார். கவலையில் தோய்ந்து காலத்தைப் போக்காதே. இந்த உபதேசம் துண்மையான கருத்து. இதனைப் புரிந்து கொண்டால் தான் மேற்கும் கிழக்கும் எவ்வாறு மாறுபடுகின்றன என்று புரிந்துகொள்ள முடியும். மேலைநாட்டான் கீழ்வருமாறு கருதினான்: "என்னுடைய சமயத்தைப் பரப்ப ஒலிவாங்கி பயன் படுகிறது. என்னுடைய சமயம் அறிவின் அடிப்படை