பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 75 யில் கட்டப்பட்டது. இந்த ஒலிவாங்கி என்ற பொருளில் கடவுளின் பெருமையை நான் எடுத்துச் சொல்கிறேன். அறிவின் துணைகொண்டு இந்த ஒலி வாங்கியைக் காணுமாறு செய்தவனே கடவுள். ஆதலின் இதனை நான் ஆராய வேண்டும் என்று கருதிக் கருவி ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத் தினேன்.” இந்த நாட்டுக்காரன் என்ன எண்ணினான் என்றால், "ஒலிவாங்கி வரும் முன்பும் மனிதன் பேசிக் கொண்டுதான் இருந்தான், இல்லாமல் போய் விட்டாலும் மனிதன் பேசத்தான் போகிறான், இடையில் வந்தது இது. எதற்காக இது பற்றிய ஆராய்ச்சியில் இவ்வளவு கருத்துான்றி நிற்க வேண்டும்" என்பதேயாகும். இது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. எந்தப் பொருளையும் ஏற்கும் பொழுது அதனுடைய இயல்புகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் மனிதனுக்குக் கவலையே வருவதில்லை. எந்த ஒரு பொருளையும் கீழை நாட்டான் முன்னும் பின்னும் தொடர்பில்லாத ஒன்றாகக் காணவில்லை. மேலைநாட்டுக்காரன் பொருள்களைத் தொடர்பற்றவையாகக் காணுகின்றான். தொடர் பில்லாத ஒன்றாகக் காண்பதால் அவை பற்றிய ஆராய்ச்சி நிகழ்கிறது. இது எப்படி வாழ்க்கைக்குப் பயன்படும்? 'தண்ணிரில் எப்படி நீர்க்குமிழி தோன்றித் தோன்றி மறைந்துவிடுகிறதோ, அப்படித் தான் முன்னேற்றம் என்ற பெயரினால் குறிக்கப் படுபவை அவற்றைப்பற்றி மிகுதியாகக் கவலைப்படத் தேவையில்லை. இவையெல்லாம் இல்லாத காலத்திலும் மனிதன் வாழத்தான் செய்தான். இவை ஒரு காலத்தில் மறைந்தபோதும் வாழத்தான் போகின்றான். எக் காலத்திலும் உலகம் என்பது வேறு,