பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அ.ச. ஞானசம்பந்தன் நீ வேறு. என்றுமே நீயும் உலகமும் ஒன்றாக ஆகப் போவதில்லை. அமைதியாக இருந்துகொண்டு தியானம் செய்கின்றார்களே (contemplation), அதில் பெறுகின்ற இன்பத்தை வேறு எதிலும் பெற முடியாது.” இதுதான் புத்ததேவன் உபதேசத்தின் அடிப்படை, கன்பூசியசின் உபதேசத்தின் அடிப்படை இரண்டு பேர் மட்டுமே இவ்விதம் எண்ணினர் என்று நினைக்க வேண்டா, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் ஐன்ஸ்டீனைப் பத்திரிகையாளர் அணுகி, "உங்கள் வாழ்க்கையில் மிகவும் பெரிதாகக் கருதுவது எதனை?” என்று கேட்டனர். அவர் "மிகவும் அழகான இரவு நேரத்தில் வெட்ட வெளியில் நின்று நிர்மலமான ஆகாயத்தைப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்ப்பதுதான் மிகப் பெரிய இன்பம்” என்றார். மிகப் பெரிதாக அவர் கருதியதும் அதுதான். இனி, மற்றொரு விஞ்ஞானி ஆஸ்போர்ன் (Osborne). இவருக்கு ஏதாவது புதியதாகக் கண்டு பிடித்துவிட்டால் மண்டை கனத்தது போலத் தோன்றுமாம். அப்போது வெளியே போவாராம். வானத்தை அண்ணாந்து பார்ப்பாராம். பால்வெளி (Milkyway) அவர்தம் பார்வையில் படுமாம். பால்வெளியைத் தியானம் செய்வாராம். அந்தப் பால் வெளியையும் விழுங்கக்கூடிய பேரண்டங்கள் உண்டு. அதனை எண்ணிப் பார்ப்பாராம். அதில் இந்தப் பால் வெளி சிறிய ஒரு பகுதி என்று தோன்றுமாம். அப் பால் வெளியில் நமது சூரிய மண்டலம் ஒரு சிறிய துகள் என்று நினைப்பாராம். சூரிய மண்டலத்தில் நமது பூமி மிகச் சிறியது என்று எண்ணுவாராம். அப்பூமியில் நமது நாடு மிகச்சிறியது என்று எண்ணுவாராம். அந் நாட்டில் நம் ஊர் மிகவும் சிறியது என்றும், அதிலும்