பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அ.ச. ஞானசம்பந்தன் செய்முறையாகச் செய்து காட்டியதனையும் கண்டேன். நம்மைப் பற்றிய இந்த இரண்டு எண்ணங்கள் எவ்வாறு அவர்கட்கு ஏற்பட்டன என்று என்னை எண்ணத் துரண்டியது. இந்த இரண்டும் நம் நாட்டில் நிகழ்வது உண்மைதான். ஏன் என்று புரியாமல் அவதிப்பட்டேன். நார்த்ரோப் (Northrope) எழுதிய "கிழக்கும் மேற்கும் (East and West) என்ற நூலைப் படிக்கும்போதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது. அவர்தாம் இதற்கு விளக்கம் சொன்னார்: "இந்திய நாட்டான் உண்மை (Truth) என்று சொல்லுவதற்கும் மெய்ம்மை (Pact) என்று கூறுவதற்கும் என்றுமுள்ளது (Eternal) என்று பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. மேனாட்டானாகிய எதனை உண்மை என்று கூறுகிறாயெனில் அன்றாடக் காட்சிகளையும் உண்மை என்கிறாய், எதனை நன்மை (Good) என்று எண்ணுகிறாயோ அதுதான் நன்மை. மிகப்பெரிய உண்மை இது. அதனால் மேனாட்டார் மதமாற்றம் (prosilitisation) செய்கிறார்கள்" என்று நார்த்ரோப் எழுதுகிறார். பிற மதங்களிலிருக்கின்றவர்கள் மோட்சம் போக முடியாது; தம்முடைய மதத்திற்கு வந்தால்தால் அது முடியும் என்பதால், நம்மையெல்லாம் தங்கள் வழிக்கு இழுத்துத் தம் சமயத்தைப் போதிக்கின்றனர். - இந்த நாட்டுக்காரன் நன்மை என்பது ஒர் ஒப்புச்சொல் (relative term) என்ற முடிவுக்கு வந்து விட்டான். எனக்கு நல்லது என்பது மற்றொருவர்க்கும் நல்லதாக இருத்தல்வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மிக உயர்ந்தது என்று நான் எண்ணுவதனைப் பிறரும் மிக உயர்ந்ததாகக் கொள்ள வேண்டும் என்ற தேவையே இல்லை. தீர்க்கதரிசிகளை மட்டும் நம்பி