பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மனக் குகை (மரகதம் கைப் பெட்டியை எடுக்கிருள்) சீதா : அவர் சேர்வு நீங்கி எழுங்கிருந்தால் உண்மை தெரியவரும். அது வரையிலும் கோபிக்காமல் இருங்கள். மரகதம் (வெறுப்போடு) : இன்னும் ஒன்றும் இதற்கு மேலே தெரிய வேண்டாம். நான் இனி ஒரு கிமிஷம் இங்கே தங்கமாட்டேன். (புறப்படுகிருள்) சீதா : இங்கே க்திலே எங்கே அக்கா போவீர்கள் ? விடியும் வரையிலாவது இருங்கள். மரகதம் : ஆமாம்-கான் உயிரோடு போகிறது.கூட உனக்குப் பிடிக்கவில்லையா ? எனக்குச் சீர் சிறப்பு ஒன்றும் வேண்டாம். உயிரோடு போய்ச் சேர்க் கால் போதும். - சீதா : அக்கா, இப்படிக் கோபமாகப் போகிறீர்களே, என் மேலே கூட உங்களுக்கு இாக்கமில்லையா ? (தேம்பி அழுகிருள்; மரகதம் : அந்த நீலிக் கண்ணிரெல்லாம் எனக்குத் தெரியும். அதனலே கான் இனி ஏமாற மாட் டேன். இனி இந்த வீட்டில் கால் வைக்கிறதில்லை. (கோபத்தோடு வேகமாகப் போகிருள், சீதா தேம்பி அழுது கொண்டே மாதவனிடம் வருகிருள்.) சீதா : மாது, எப்படி இருக்கிறது ? (முன்ருனையால் மாதவன் முகத்தைத் துடைக்கிருள். அவன் மெதுவாகக் கண் விழித்துப் பார்க்கிருன்) மாதவன் : உஸ்...... அப்பப்பா...... சீதா, நான்......