பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மனக் குகை மாதவன் : அதுதான் இல்லையே? - சீதா : நீங்கள் என்னேப் பற்றிக் கவலைப்படக்கூடாது. கவலைப்படாமலிருந்தால் சீக்கிரம் எல்லாம் குண மாகிவிடுமென்று சொல்லுகிருர்கள். மாதவன். எனக்கென்னவோ கம்பிக்கையே போய்விட் டது. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்து விட் டோம். மருந்து சாப்பிட்டு எனக்கும் சலித்துப் போய்விட்டது. சீதா : மனக் கோளாறுகளைச் சரிபடுத்தப் புதிதாக இப்போ ஒரு டாக்டர் வந்திருக்கிரு.ராம். அந்த மன மருத்துவரிடம் காளேக்குப் போகலாமா? மாதவன் : அவன் மனசுக்கு ஊசிபோடுகிருனே? எல் லாம் ஏமாற்றம். மன மருத்துவனம், மனமருத்து வன் ... சீதா : அப்படி கினேக்கப்படாது, அந்த டாக்டர் ஊசி போடுவதே இல்லேயாம். உண்மையிலே அவர் மருந்தே கொடுப்பதில்லை. மனக்கோளாறுகளின் காரணத்தைக் கண்டு பிடித்து அதைச் சரிபடுத்த வழி சொல்லுகிரு ராம். ரொம்பப்பேருக்கு ஆச்சரிய மாக, நல்லது பண்ணியிருக்கிருள் என்று கேள்வி. மாதவன் : மருந்து கொடுக்காமல் மந்திரம் பண்ணுகிற வைத்தியமா இது உலகத்திலே இப்படி ஏமாற்றம் ஒன்ரு இரண்டா? சீதா : நேரிலே போய்ப் பார்த்தால் விஷயம் தெரியும். அதற்கு முன்னே எப்படி... ... ' மாதவன் : சீதா, நான் வாத் தயாராகஇல்லை. ேேவணு மால்ை போய் அவனைப் பார்த்து விட்டுவா-எனக்கு ஆட்சேபம் இல்லை.