பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் இரண்டு-காட்சி ஒன்று (மனமருத்துவர் தமது சிகிச்சை அறையில் அமர்க் திருக்கிருர் . சீதா உள்ளே நுழைகிருள்.) மனமருத்துவர் : வாங்கம்மா - உங்க ள் பேர்தான் சிகாவா ? என்ன விசேஷம் ? சீதா : என் கணவருக்கு ஏதோ ஒரு விதமான மனக் கோளாறு இருக்கிறது. அ ைகப்பற்றி உங்களிடம் ஆலோசனை கேட்கலாமென்று வந்தேன். சாதாரண வைத்தியமும் மருந்தும் பயன் கொடுக்கவில்லை. மனமருத்துவர் : உங்கள் கணவர் எங்கே ? சீதா : அவர் வரவில்லை. முதலில் நான் வந்து உங்க வளிடம் விஷயத்தைக் கூறி விட்டுப் பிறகு அவரை அழைத்து வரலாமென் று நினைத்தேன். மனமருத்துவர் : அவருடைய நடத்தையில் விபரீதம் ஏதாவது காணப்படுகிறதா ? சீதா திடீரென்று ஒவ்வொரு சமயத்திலே மனம் பேதலித் துப் போகிறது. கொஞ்ச நேரம் தாறு மாருகப் பேசுகிருர். பெண்களை க்கான் அதிகமாக திட்டத் தொடங்குகிருர். வெறிக்க வெறிக்கப் பார்க்கிருர். பிறகு அப்படியே சோர்ந்து படுத்து விடுகிரு.ர். மனமருத்துவர் : முகத்திலே பயக் குறி தோன்று கிறதா ? சீதா : எகோ பேயைக் கண்டு நடுங்குவது போலக் தோன்றுகிறது.