பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 39 மனமருத்துவர் : பலாத்காரமாக ஒன்றும் செய்வ தில்லையே? சீதா : அவரையிலும் ஒன்றும் இல்லை. அன்றைக்கு அவருைடய அக்காள் வந்திருந்தபோது அவள் மேலே காற்காலியைத் துக்கி வீசப் போய் விட்டார். நல்லவேளை : அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மனமருத்துவர் : இந்தப் பிரமை உண்டாவதற்கு ஏதா வது குறிப்பாகக் காரணம் தெரிகிறதா? சீதா : ஒருநாள் கறுப்பான தாக்கமரப் பீரோ வைக் சுண்டு அவருக்கு புத்தி பேதலித்துவிட்டது. கருங் காடியைப் பார்த்துவிட்டு வந்த அன்றிரவும் அப்படி பாயிற் று. அதனல் கறுப்பான உருவங்களே க் கண்டால் இப்படி ஏற்படுகிறதோ என்று சந்தேகப் படுகிறேன். இப்போது வீட்டிலே கறுப்பாக எதுவும் நான் வைப்பதில்லை. மனமருத்துவர் : மனத்திலே ஏற்பட்ட ஏதோ ஒருவித அதிர்ச்சியால்தான் இந்தப் பிரமை ஏற்பட்டிருக்க வேண்டும். சிறுவயதிலே ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். ஆணுல் அவரைச் சோதனை செய்து பார்க்காமல் நிச்சயமாக நான் ஒன்றும் சொல்ல முடியாது. சீதா : நாளேக்கு கான் அவரை அழைத்து வருகிறேன். நீங்களே பரீகை செய்து பாருங்கள். மனமருத்துவர்: அவருடைய உள்ளத்தின் ஆழத்திலே புதைந்து கிடக்கும் சிறு வயசு அதுபவங்களே நான் வெளிப்படுத்த வேணும். அவரையே அவற்றை நினைவுக்குக் கொண்டு வரும்படி செய்துவிட்டால் பிறகு எல்லாம் சுலபமாக முடிந்து போகும்.