பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 31 தார். ேன எல்லாவற்றையும் கெடுத்து விட்டேன்... சீதா ஏன் ? என்ன நடந்தது ? மாதவன் : மானேஜருக்கு இதுவரையில் என் மேலே ரொம்பப் பிரியம். என் வேலையிலே அவருக்கு அளவு கடந்த திருப்தி. சீதா : ஆமாம் ; இதை முன்பே சொல்லியிருக்கிறீர்கள். மாதவன் : அதனலே சம்பளம் 50 ரூபாய் அதிகம். பண்ணியதோடு என்னிடம் அதைப்பற்றித் தெரி வித்துப் பேசுவதற்கு வந்தார். நான் வேலை செய்யும் அறைக்கே வந்தார். என் அதிருஷ்டம், எல்லாம் கெட்டுத் தொலைந்தது. சீதா : உங்கள் அதைக்கே வந்தாரா ? மாதவன் : ஆமாம். வந்த தனியாக என்னேடு பேசி உற்சாகப்படுக்க ஆசைப்பட்டிருக்கிருர் ஆல்ை நான் அவரை வாயில் வந்தபடி பேசி விட்டேன். சீதா : ஏன் ? திடீரென்று உடம்புக்குச் சரிப்பட வில்லையா ? மாதவன் : மானேஜர் என்றைக்குமில்லாமல் புதிதாக இன்றைக்குக் கன்னங்கரேலென்று ஆல்பாக்கா கோட்டுப் போட்டுக்கொண்டு வந்தார். தலையிலே வேறு கறுப்புக் குல்லாய் வைத் திருந்தார். அதை யெல்லாம் பார்த்ததும் எனக்கு சுயநினைவே போய் விட்டது. என்னவோ உளறிக் கொட்டிவிட்டேன். சீதா : பாங்கிலே இதுவரையிலும் இப்படி கடந்ததே இல்லையே ? மாதவன் (விசனத்தோடு): ஆமாம், இதுவரையிலும் பாங்கிலே யாருக்கும் என்னுடைய மனநோய்