பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மனத்தின் சக்தியால் மனிதன் எத்தனையோ அரிய செயல்களைச் சாதித்திருக்கிருன். இயற்கையின் இரகசியங் களே அறிந்துகொள்வதற்கும், இயற்கையை வென்று அதன் மேல் பெரியதோரளவிற்கு ஆதிக்கஞ் செலுத்துவதற்கும் மனம் உதவி யிருக்கிறது. ஆனல், அந்த மனத்தின் இரக சியத்தை மட்டும் கம்மால் பூரணமாக அறிந்துகொள்ள முடியவில்லை. அதை வென்று அதன்மேல் முழு ஆதிக்கம் செலுத்துவதற்குப் பெரிய பெரிய ஞானிகள்ெல்லாம் எவ் வளவோ சிரமப்பட்டிருக்கிருர்கள். பலர் தங்கள் முயற்சி யிலே தோல்வியடைந்துமிருக்கிருர்கள். மனம் மனிதனை எப்படியெல்லாமோ ஆட்டிவைத்து விடுகிறது. சாதாரணமாக காம் மனம் என்று கூறுவது மனத்திலே வெளிப்படையாகத் தொழில் புரியும் சிறு பகுதி யைத்தானும், மனத்தின் பெரும் பகுதி மறைந்து கின்று காரியம் செய்கிறதாம். அதன் சக்திதான் மிக அதிகமாம். மனத் தத்துவம் கூறும் இந்தக் கருத்துக்களை அடிப் படையாகக்கொண்டு இங் நாடகம் உருவாகியுள்ளது.ஆனல், இக்கருத்துக்களை விளக்கவேண்டும் என்பதற்காக நான் நாடகம் எழுதவில்லை. எனது நோக்கம் வேறு. அது நாடகத் திலே வெளியாகும். புது முறையிலே நாடகம் எழுத மனத் தைப்பற்றிய ஆராய்ச்சிகள் அடிப்படையாக அமைந்தன என்பதையே தெரிவிக்க விரும்புகிறேன். பெ. தூரன்