பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன க் குகை மனமருத்துவர் : ஆமாம். அது கான் முக்கியம். ஒன் றையும் மறைக்கக்கூடாது. எவ்வளவு கேவலமான எண்ணமாக இருந்தாலும் பரவாயில்லை, சொல்லுங் கள். நான் அதை வெளியே யாரிடமும் சொல் மாட்டேன். அ ைகப்பற்றிச் சந்தேகம் வேண்டாம். மாதவன். சரி, டாக்டர் கேள்வியெல்லாம் கேளுங்கள். (படுக்கையிலே படுக்கிருன்,:மனமருத்துவர் விளக்கை மங்கலாக வைக்கிரு.ர்.) மனமருத்துவர் : நான் கேட்கிறது கேள்வியே அல்ல. ஏதாவது சில வார்த்தைகளைச் சொல்வேன். ஒரு வார்த்தையைக் கேட்டதும் உள்ளத்திலே என்ன என்ன எண்ணமெல்லாம் மேலெழுத்து வருகின்ற னவோ அவற்றையெல்லாம் அப்படியே யோசனே பண்ணிப் பார்க்காமல் சொல்லவேனும். மாதவன் : அப்படியே சொல்கிறேன். மனமருத்துவர் : கை கால்களைத் தளர்த்தி விட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் ஒய்வு நிலையில் இருக்கட் டும். இதோ இப்பொழுது நான் ஒரு வார்க்கை சொல்லப்போகிறேன். இமயமலைக் கரடி - இமய மலைக் காடி....... மாதவன் : ஹா, பெரிய பூதம் - அதோ மரத்திலே காவி ஏறுகிறது-வாயிலிருந்து அக்கினியைக் கக்கு கிறது. ஐயோ, கண் போச்சு......குரல்வளையைப் பிடிக்க வருகிறதே...... யார் அக்கப் பிள்ளை-அங் தப் பொட்டச்சி எங்கே ஒடுகிருள் ? (வேகமாக மூச்சு விடுகிருன். உஸ்...என்று சத்தமிடு கிருன்.)