பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 39 மாதவன் : சீதா, இரு. ஒரு நிமிஷத்திலே வந்து விடு கிறேன். (மாதவன் துவாலேயை எடுத்துக் கொண்டு மறுபுற மாகப் போகிருன்) சீதா (ஆவலோடு): டாக்டர், ஏதாவது விஷயம் புரிக் கதா ? மனமருத்துவர் : ஒரளவு துப்புக் கிடைத்திருக்கிறது. பால்யத்தில் ஏற்பட்ட மன அதிர்ச்சிதான் காரண மென்று கிச்சயமாகக் தெரிகிறது. ஆனல் ஒரே தடவையில் எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஒரள வுக்கு மேலே மாதவன் சொல்ல மறுத்து விட்டார். முதல் தடவையிலே வற்புறுத்தக்கூடாது என்று நானும் விட்டுவிட்டேன். பக்குவமாகத்தான் அவர் ஒத்துழைப்பைப் பெறவேணும். அவர் இணங்கி வந்தால் இன்னும் இரண்டு மூன்று பரீட்சைகளில் விஷயத்தைக் கண்டு பிடித்து விடலாம். சீதா : மறுபடியும் எப்போது வரலாம்? மனமருத்துவர் : இரண்டு நாள் பொறுத்துவாவேனும், காளே க்கு அவர் ஒய்வெடுத்துக் கொள்ளட்டும். அதற்கடுத்த நாள் இந்த நேரத்திற்கு வாருங்கள். சீதா : அதுவரையிலும் ஏதாவது எச்சரிக்கைவேனுமா டாக்டர் ? மனமருத்துவர் : கறுப்பான பொருள்கள் அவர் கண் னில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இாவிலே மாமெல்லாம் கறுப்பாகத் தெரியும் - அதஞலே வெளியே அந்த நேரத்திலே போகவேண்டாம். நீங் களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேணும்.