இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
மனத்தின் தோற்றம்
தமிழ் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் |
கால்(எண்) | கால் | கால் | கால் |
அரை(அரெ) | அர | அரெ | அர |
முக்கால் | முக்க | முக்கா | முக்கால் |
ஒன்று | ஒக்கட்டி | ஒந்து | ஒந்து |
இரண்டு | ரெண்டு | ரெடு | ரண்டு |
மூன்று | மூடு | முரு | மூந்நு |
நாலு-நான்கு | நாலுகு | நால்கு | நாலு |
அஞ்சு, ஐந்து | ஜது | ஐது | அஞ்சு |
ஆறு | ஆரு | ஆரு | ஆறு |
எட்டு | எனிமிதி | என்டு | எட்டு |
ஒன்பது | தொம்மிதி | ஒம்பத்து | ஒன்பது |
பத்து | பதி | ஹத்து | பத்து |
அண்ணன் | அன்ன | அண்ணா | - |
தம்பி | தம்புடு | தம்ம | - |
தாத்தா | தாத | தாத | மூப்பன் |
அது இது எது | இதி இதி எதி | அது இது எது | அது இது எது |
சிறிய-சின்ன | சின்ன | சிக்க | சிறிய |
நெருப்பு-தீ | நிப்பு | (பெங்கி) | தீ |
மழை-வான் | வானெ | மளெ | மழ |
கொடு-ஈ | ஈய் | கொடு | கொடு |
பகல் | பகலு | அகலு | பகல் |
யார்=எவர் | எவரு | யாரு | யாரானு |
ஊர் | ஊரு | ஊரு | ஊரி |
சோறு-ஊண் | (அன்ன) | ஊண்ட | ஊணு |
கண் | கன்னு | கண்ணு | கண்ணு |
மூக்கு | முக்கு | மூங்கி | மூக்கி |
காது-செவி | செவ்வு | கிமி | செவி |
வாய் | (நோரு) | பாயி | வாயி |
தலை | தல | தலெ | தல |
எருது-காளை | எத்து | எத்து | காள |