பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108
மனத்தின் தோற்றம்
 


பாலும் அவை இப்போது மறைந்து விட்டன. இசை மரபு என்ற நூலை மறப்பதற்கில்லை. தொல்காப்பியம் - நூல் மரபு என்னும் இயலில் உள்ள —-

“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடிலும்
உளவென மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” (33)

என்னும் நூற்பாவில் உள்ள இசையொடு சிவணிய நரம்பின் மறை என்னும் பகுதி தமிழில் இசை இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதற்குச் சான்றாகும். என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் என்னும் பொருளில் ‘என்மனார் புலவர் என்று கூறியிருப்பதைக் கொண்டு, முன்பிருந்த பல இசை நூல்களை உள்ளத்தில் கொண்டு கூறியுள்ளார் என்பது புலனாகும். மற்றும் அவர், அகத் திணை இயலில் —

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்று கூறியிருப்பதிலிருந்து, அந்தக் காலத்திலேயே தமிழில் நாடக இலக்கண நூல்கள் - அதாவது - கூத்துத் தமிழ் இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதை அறியலாம்.

இது காறும் கூறியவற்றால், முத்தமிழ் வளர்ச்சிக்கும் இலக்கணப் புலவர்கள் கொடுத்துள்ள கொடைமிகுதி என்பது தெள்ளிதின் புலனாகும்.