பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

111



தொல்காப்பியர் சொல்லாத சில செய்திகளைப் பவணந்தியார் நன்னூலில் சொல்லியுள்ளார். எடுத்துக்காட்டுகள்:

ஆவிரை என்ற சொல்லைக் குறிப்பிட்டுத் தொல் காப்பியர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நன்னூலார் இச் சொல்லைக் குறிப்பிடவில்லை. தொல்காப்பியர் சொல்லாத பதவியலை நன்னூலார் நன்னூலில் புகுத்தியுள்ளார். எகர ஒகரம் புள்ளியொடு நிற்கும் எனத் தொல்காப்பியர் சொன்னதை நன்னூலார் சொல்லவில்லை.

தொல்காப்பியரையே எடுத்துக் கொள்வோமே - இப்படியெல்லாம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். உயிர் மயங்கியலில் புணர்ச்சிவிதி சொல்லும் இடத்திலும் இவ்வாறு கூறியுள்ளார்:

“செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்” (20)

என்பது நூற்பா.

இப்போதைய மொழியியலார் இப்போது வழக்கில் இல்லாததை நீக்கிப் புதிய வழக்கைப் புகுத்துகின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இயல்புப் புணர்ச்சி நீங்கலான விகாரப் புணர்ச்சிகள் - அதாவது - தோன்றல், திரிதல், கெடுதல் உள்ள விகாரப் புணர்ச்சிகள் அனைத்தும், பழமை நீங்கிய புதிய வழக்காறுகளே. எனவே, தொல் காப்பியரையும் அந்தக் காலத்துப் புதிய மொழியலார் என்று கூறலாம். ஒரோஒர் எடுத்துக் காட்டு வருமாறு:

மக்கள் பனைமரத்தின் பூவைப் ‘பனம்பூ’ என்கின்றனர். ஆனால் ‘பனம்’ என ஒரு சொல் கிடையாது. பனை என்பதன் ஈற்றில் உள்ள ஐ கெட்டு, ‘பன்’ என நிற்க, அதனுடன் ‘அம்’ என்பது சேர்ந்து ‘பனம்’ என்றாகிறது. இதோடு பூ