112
மனத்தின் தோற்றம்
சேரும் போது ‘பனம்பூ’ என்றாகிறது. ‘காய்’ என்பது சேரின் ‘பனங்காய்’ என ‘ம்’ என்பது ‘ங்’ எனத் திரிகிறது. ஆவிரை என்ற சொல்லுக்கும் இதே விதிதான்:
- “பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
- கினையுங் காலை அம்மொடு சிவனும்
- ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே
- மெய் அவண் ஒழிய என்மனார் புலவர்” (81)
என்பது உயிர் மயங்கியல் நூற்பா. பனை பூ என்னும் பழைய இயற்கையான சொற்களை மக்கள் பனம்பூ எனத் திரித்துப் பேசினர். புதுமைக்கு இந்தக் காலத்து மொழி யியலார் இடம் கொடுப்பது போலவே, அந்தக் கால மொழியியலாராகிய தொல்காப்பியரும் புதுமைக்கு இடம் கொடுத்துள்ளார். இவ்வாறு எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் தர முடியும்.
இந்தக் கால மொழியியலாரின் கூற்றுப்படி, ‘பனைபூ’ என்பதைப் பழைய தமிழ் என்றும், ‘பனம்பூ’ என்பதை அந்தக் காலப் புதிய தமிழ் என்றும் கொள்ளல் வேண்டும். இந்தக் காலத்திலும் பனம்பூ என்றே மக்கள் வழங்குகின்றனராதலின், இந்தக் காலத்து மொழியியலாருக்கு வேலை வைக்காமல் இவர்களின் வேலையை அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் முடித்து வைத்துச் சென்றுள்ளார்.
மற்றும், தஞ்சாவூர் தஞ்சை எனவும், வாழ்நன் வாணன் எனவும், ஐந்து அஞ்சு எனவும், மையல் மயல் எனவும் மக்கள் வழங்குவதற்கு, முன்னமேயே இலக்கண ஆசிரியர்கள் அமைதி கூறியுள்ளனர். (மரூஉ, போலி)
இதுகாறும் கூறியவற்றால் அறிய வேண்டுவதாவது: ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் புதுமை பெற்றுத் தான் வந்துகொண்டிருக்கிறது; ஆனால், இவ்வளவு கால மாக நடந்து வருவது போலவே, மொழியியலார் ‘புதிய