உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மனத்தின் தோற்றம்



தனித்தேர்வும் எம்.ஏ (M.A.) என்னும் முதுகலைப்பட்டமும் உண்டு.

இதற்கென நூற்றுக்கணக்கான புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழியியலார் படித்து அறிந்து வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் தமிழில் புகுத்தவும், அவற்றின் அடிப்படையில் தமிழை அணுகவும், அந்தத் துறைக் கண்கொண்டு தமிழைக் காணவும் மொழியியலார் சிலர் முனைந்து முயல்கின்றனர்.

மற்றதுறைப் பாடங்களாலும் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சிறிது கொடை கிடைக்காலம். அவற்றினும், மொழியியலால் சிறிது கூடுதலாகத் தமிழ் வளர்ச்சிக்குக் கொடை கிடைக்கலாம் . அவ்வளவுதான். எனவே, மொழியியல் என்னும் ஒரு பொதுப் பெயரை வைத்துக்கொண்டு, தமிழுக்கு முன்னால் ‘புதிய’ என்னும் அடைமொழியைச் சேர்த்துப் ‘புதிய தமிழ்’ படைக்கப்போகிறோம் என்று அடம் பிடிப்பது பொருந்தாது.

இன்றைய மொழியியலார் எழுத்து சொல் - சொற்றொடர் இவற்றிலேயே நிற்கின்றனர். பொருளுக்குப் போவது குறைவு. எனவே, தமிழ் எழுத்துகளின் மேல் தங்கள் சினத்தைச் செலுத்தி அவற்றுள் சிலவற்றை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாயுள்ளனர். இது அவர்களின் பங்குகளுள் ஒன்றாகும்?

இந்திய மொழிகளுள் தமிழ் மொழியில் எழுத்து குறைவு. க, ச, ட, த, ப என்பன நந்நான்கு வரிவடிவமும் ஒலிவடிவமும் பெற்றுள்ள மற்ற இந்திய மொழிகட்கு உள்ள சுமை தமிழுக்கு இல்லை.

ஆங்கிலம் இருப்பத்தாறு எழுத்தில் நடை போடுகிறதாம். அதனால்தான், நெடுநல்வாடை என்பது Nedu Nal valai என ஆங்கில எழுத்தில் எழுதப்