சுந்தர சண்முகனார்
115
பட்டிருந்ததை ஒருவர் நெடுநாள் வடை' என்று படித்தாராம். குறில் - நெடில் தனித்தனியே இல்லாத குறையினால் நேர்வது இது போன்றது.
ஆங்கிலத்தில் A, (A), a, (a) B, (B), b, (b) எனப் பெரியஎழுத்தில் அச்செழுத்து ஒன்று-கையெழுத்து ஒன்று, சிறிய எழுத்தில் அச்சு எழுத்து ஒன்று - கையெழுத்து ஒன்று - என ஒவ்வோர் எழுத்திற்கும் பெரும் பாலும் நான்கு வரிவடிவங்கள் உள்ளன. இதை நோக்கத் தமிழில் எழுத்து மிகக் குறைவே என்பது தெளிவாகும். இங்கே, சீன மொழியின் எழுத்துப் பெருக்கத்தை ஒப்பிட்டு நோக்கின் வியப்பாயிருக்கும்.
தமிழில் நடைமுறை வசதிக்காக உயிர்மெய் எழுத்து படைக்கப்பட்டுள்ளது. முருகு என்னும் மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை, ஆங்கிலத்தில் Muruku என ஆறு எழுத்துகளாலும், Mourourkou எனப் பிரெஞ்சு மொழியில் ஒன்பது எழுத்துகளாலும் எழுதவேண்டும் தமிழை உரோமன் எழுத்தால் எழுதலாம் என்பவர்கள் இதை ஊன்றி நோக்கவேண்டும்.
ஆனால், தட்டச்சு, கணிப்பொறி முதலிய துணைக் கருவிகளின் காரணமாக எழுத்தைக் குறைக்க வேண்டியது தேவையாகிறது, இது, தொப்பிக்கு ஏற்பத் தலையையும், மிதியடிக்கு ஏற்பக் காலையும் செதுக்கிக் கொள்வது போன்றது. தமிழுக்கு ஏற்பப் பொறி அமைக்க முயலின் முடியுமே. (எதையும் செதுக்க வேண்டா)
இப்போதுள்ள வரிவடிவங்கள் சிறார்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் முறையில் உள்ளன. க, கா, கி, கீ, கெள என்னும் வரிசை ன, னா, னி, னி, னெள என்பது வரையும் எளிதில் தன்னில் தானே ஒடும்.
எழுத்துச் சீர்திருத்தத்தில் மொழியியலார் மிகவும் வற்புறுத்துவது ஐ, ஒள என்னும் ஈரெழுத்துகளையும்