சுந்தர சண்முகனார்
117
என ஒரே வரிவடிவம் பண்டைக் காலத்தவர் கொடுத்துள்ளனர்.
இதுபோலவே, இணை, சுனை, அலை, களை, என இக் காலத்தார் ணை, னை, லை, ளை, என இரண்டு வடிவம் கொடுப்பதைக் குறைத்து , , , என ஒரே வடிவம் பண்டைக் காலத்தார் கொடுத்துள்ளனர். இது எழுத்தைக் குறைக்கவேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்பட்ட முயற்சியே. என்பதைச் சிலர் ‘னை’ என எழுதாது, ‘’, என இரண்டையும் ஒன்று போல் எழுதி விடுகின் றனர். சிலர் ‘னன’ என ஒன்று போல் எழுதி விடுகின்றனர். இரண்டும் ஒத்த வரிவடிவம் உடைமையால் நேர்ந்த குறை பாடே இது. இந்தக் குறைபாடு அச்சுக்கோப்பவரிடத்திலும் எதிரொலிக்கிறது. சில நேரங்களில் அவர்கள் ‘’ என்பதை ‘’, எனவும், ‘’ என்பதை ளள எனவும் அச்சுக்கோக் கின்றனர். இதனை அச்சுப் பிழைகள் திருத்துபவர்கள் நன்கறிவர். இந்தக் குழப்பத்தை நீக்குவதற்கே முன்னோர்கள் , , , என்னும் வரி வடிவங்களைப் படைத்தனர். நிற்க —
எழுத்துச் சீர் திருத்தம் பற்றிப் பார்த்தோம். இனிச் சில சொல்லாட்சிகளைப் பார்ப்போம்:
வேண்டாம்
தீய செயல்களைச் செய்ய வேண்டா - என எழுதுவது அந்தக் கால வழக்கு. திருவள்ளுவர்,
- “அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
- பொறுத்தானோ டுர்ந்தா னிடை” (37)
- “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
- பழித்த தொழித்து விடின்” (280)
என, வேண்டாம் என்னும் பொருளில் வேண்டா என்னும் சொல்லையே கையாண்டுள்ளனர். வேண்டா என்றிருந்தால்