124
மனத்தின் தோற்றம்
கூறுவதால் இந்த நூல் பிரபுலிங்க லீலை என்னும் பெயர் வழங்கப் பெற்றது. லிங்கம் என்பது தெய்வத் தன்மையைக் குறிப்பது. வீர சைவர்கள் இலிங்கத்தைத் தம் உடலிலேயே அணிந்து கொண்டு வழிபடுபவர்கள். அதனால் நூல் பெயரில், பிரபுலிங்கம் என்னும் பெயர் இடம் பெற்றது. இந்நூலில் இருபத்தைந்து கதிகள் உள்ளன.
1.2. ஆசிரியர் அறிமுகம்
பிரபுலிங்கலீலை நூலாசிரியர் கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சிவப்பிரகாச அடிகளா ராவார். இவர் குமாரசாமி ஐயர் என்பவரின் திருமகனார். வீரசைவரும் ஐயர் என்ற பட்டம் வைத்துக் கொள்கின்றனர். அடிகளாரின் இளவல்களாகிய கருணைப் பிரகாசர், வேலையர் என்பவர்களும் புலவர்களாகத் திகழ்ந்தனர்.
அடிகளார் இடைக் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் என்ற ஊரில் தங்கியிருந்தமையால் துறைமங்கலம் சிவப்பிரகாசர் எனப் பெயர் வழங்கப் பெற்றார். இறுதிக் காலத்தில், புதுச்சேரிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாற்றுாரில் தங்கியிருந்தமை யாலும் அவரது அடக்கமும் அந்த ஊரிலே இருப்பதாலும் நல்லாற்றுார்ச் சிவப்பிரகாசர் என்றும் பெயர் வழங்கப் பெறுகிறார். இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். இவர் பாடல்களில் நயமான கற்பனைகள் செறிந்திருக்குமாதலின், இவர் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் என்றும் பெயர் வழங்கப் பெறுகிறார்.
2. கற்பனை வளம்
2.1. தாழ்ந்தோர் - உயர்ந்தோர்
உலகில் செல்வம் நிலையான தன்று. ‘மூன்று தலை முறை தொடர்ந்து வாழ்ந்த குடும்பமும் இல்லை - மூன்று தலைமுறை தொடர்ந்து தாழ்ந்து வீழ்ந்த குடும்பமும்