இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
125
இல்லை’ என்னும் பழமொழி ஒன்றுன்டு. இதில் ஒரளவு விதி விலக்கும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நிலையானவை அல்ல - வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம். இந்தக் கருத்தை நறுந்தொகை என்னும் நூல் விரிவாக விளக்குகின்றது. வருமாறு:
- “உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” (49)
- “குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்க்தோர்
- நடைமெலிந்து ஒரூர் கண்ணினும் கண்ணுவர் (50)
- “சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
- அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” (51)
- “அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
- அரசரோ டிருந்து அரசாளினும் ஆள்வர்” (52)
- “குன்றத்தனை இரு நிதியைப் படைத்தோர்
- அன்றைப் பகலே அழியினும் அழிவர்” (33)
- “எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
- கழுதை மேய் பாழாயினும் ஆகும்” (54)
- “பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
- பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
- நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” (55)
பட்டறிந்து எழுதிய இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.
இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:
- “அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
- மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்
- சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வ மொன்று
- உண்டாக வைக்கற்பாற் றன்று” (6.1)