பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மனத்தின் தோற்றம்



“அகடுற யார்மாட்டும் கில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்” (62)
“யானை எருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர் தாம்கொண்ட
மனையாளை மாற்றார் கொள” (63)

செல்வத்தை - செல்வாக்கை இழப்பதன்றி, மனை யாளையும் மாற்றார் கொள்ள இழப்பர் என்பது மிகவும் இரங்கத் தக்கது . வருந்தத் தக்கது.

இன்னும் தமிழ் நூல்களைத் துருவினால் இத்தகைய எண்ணற்ற அகச் சான்றுகளைக் காணலாம்.

இந்தக் கருத்துகளை யெல்லாம் உள்ளத்தில் கொண்டு சிவப்பிரகாசர் பிரபு லிங்க லீலை மாயையின் உற்பத்தி கதி என்னும் பகுதியில் பின்வருமாறு கூறியுள்ளார்.

தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொருகால் உயர்ந்த நிலை எய்தலாம் என்றும், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொரு நேரம் தாழ்ந்த நிலை எய்தக் கூடும் என்றும், அறத்தின் இயல்பை, அற நூல்கலைக் கொண்டும் உலகியல் நடைமுறையைக் கொண்டும் ஆராய்ந் தறிந்த அறிஞர்கள் கூறியது மிகவும் உண்மை என்பதை அறிந்து கொண்டோம் - என்று அடிகளார் கூறியுள்ளார். பாடல்:

“தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வர் என்றும் அறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்” (14)

என்பது பாடல் பகுதி. அறம் சூழ்ந்தோர் என்பவர் நாலடியார் ஆசிரியர், நறுந்தொகை ஆசிரியர் முதலானோர். அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை என்பது, மேற்