128
மனத்தின் தோற்றம்
என்பன குறள்கள். திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில் நெல்பயிரைக் கொண்டு இந்தக் கருத்தைக் குறிப்பாக அறிவித்துள்ளார்:
நெல்பயிர் செல்வம் பெற்றுள்ள மேன்மையில்லாத கீழோர்போல் தொடக்கத்தில் தலை நிமிர்ந்து நின்று, பின்னர், தேர்ந்த நூல் கற்ற பெரியோர் போல் தலை தாழ்ந்து காய்த்து விளையுமாம். பாடல்:
- “சொல் அரும் பசும்பாம்பின் தோற்றம்போல்
- மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
- செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்தநூல்
- கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” (53)
என்பது பாடல். இந்தக் கருத்தை, ஆங்கிலப் பெரும் புலவராகிய சேக்சுபியரும் தமது “As you like it” என்னும் நாடக நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிலி தன்னை உயர்ந்த அறிவாளியாக எண்ணிக் கொண்டிருப்பானாம்; ஆனால், உண்மையான அறிஞன் தன்னை அறிவிலியாக எண்ணிக் கொண்டிருப்பானாம் - அதாவது, சிறுமை தன்னை வியந்து அணியுமாம்; பெருமையோ என்றும் பணியுமாம், பாடல்:
- “I do now remember a saying,
- The fool doth think he is wise,
- but the wise man knows himself to be a fool” (5-1 : 29-31)
என்பது பாடல் பகுதி. ‘I do now remember a saying’ என்பது, பிரபுலிங்க லீலைப் பாடலில் உள்ள ‘அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்’ என்னும் பகுதி போன்றது.
இனி, சிவப்பிரகாச அடிகளார் எதை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளார் என நோக்குவாம்: